ஊரடங்கு காரணமாக வெவ்வெறு மாநிலங்களில் வருமானமின்றி தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளில் நடந்து சென்றும், ட்ரக் மூலமாகவும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். இதனிடையை, தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரேதசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து ட்ரக் மூலம் தங்களது சொந்த ஊரான பஸ்தி மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த ட்ரக்கில் பயணம் செய்த கர்ப்பணி கவுசல்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ட்ரக் மத்தியப் பிரதேசத்தின் பியோரா மாவட்டத்தை நெருங்கியபோது ஓடும் ட்ரக்கிலேயே கவுசல்யா குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.