தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப்பிரதேசத்தை பின்பற்றும் மத்தியப்பிரதேசம் : கட்டாயமாக்கப்படும் கன்யா புஜான் !

போபால் : மத்தியப் பிரதேச அரசின் எந்தவொரு நிர்வாகத் திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பாக ’கன்யா புஜான்’ (பெண்-வழிபாடு) என்னும் சடங்கை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

MP: Girl-worship mandatory before any government function
உத்தரப்பிரதேசத்தை பின்பற்றும் மத்தியப்பிரதேசம் : கட்டாயமாக்கப்படும் கன்யா புஜான் !

By

Published : Dec 25, 2020, 11:36 PM IST

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அரசு அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகள், நிர்வாகத் திட்ட தொடக்க நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பெண் குழந்தைகளின் நலன்களை உறுதிசெய்யும் வகையில், ’கன்யா புஜான்’ (பெண்-வழிபாடு) என்னும் சடங்கை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டுமென அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநில அரசின் இந்த உத்தரவின் நகல் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

உத்தரப்பிரதேசத்தை பின்பற்றும் மத்தியப்பிரதேசம் : கட்டாயமாக்கப்படும் கன்யா புஜான் !

பெண் குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும் அளிக்க “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க :அமர்த்தியா சென்னுக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details