பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 126ஆவது சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமனம் தொடர தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலோ இந்தியர்களும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள்தான் என மாநில அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத் கூறுகையில், "நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்குதான் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைத்தார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மற்றவர்களைப் போல் பட்டியலின, பழங்குடி இன மக்களை கொண்டுவந்துவிடலாம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், 70 ஆண்டுகள் தாண்டியும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'வேதனையில் இருக்கிறோம்... அரசியல் செய்ய வேண்டாம்' - பாஜகவுக்கு கெஜ்ரிவால் அறிவுரை