தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 1:44 PM IST

ETV Bharat / bharat

பாஜகவிற்கு வாக்களிக்காததால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட குடும்பம்

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிற்கு வாக்களிக்காத காரணத்தினால் பாஜக அமைச்சரின் உறவினர்களால் ஒரு குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

madhya-pradesh-man-beaten-tortured-for-not-voting-for-bjp
madhya-pradesh-man-beaten-tortured-for-not-voting-for-bjp

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஒரு குடும்பம் அம்மாநில அமைச்சர் சுரேஷ் தக்காட் ராத்கேடாவின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அக்குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் அளித்ததையடுத்து இது வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து சிவபுரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "சிவபுரியில் உள்ள ஒரு குடும்பத்தினர் அம்மாநில அமைச்சர் சுரேஷ் தக்காட் ராத்கேடாவின் உறவினர்களால் தாக்கப்பட்டதாக எங்களுக்கு புகார் கிடைத்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜகவினருக்கு வாக்களிக்கவில்லை என்பதாலும், இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் உறவினர்கள் அக்குடும்பத்தை தாக்கியதாகவும் கூறினர்.

குழந்தைகளையும் அவர்கள் சித்ரவதை செய்ததாகவும் குற்றஞ்சாட்டினர். இவர்கள் அளித்த குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இவர் தான் நிகழ்கால ஷாஜகான்!

ABOUT THE AUTHOR

...view details