மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று ஜூலை 21 காலை காலமானார். அவருக்கு வயது 85. டாண்டன் உடல்நலக்குறைவின் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு - அசோக் டாண்டன்
07:30 July 21
லக்னோ: மத்தியப் பிரேதச ஆளுநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லால்ஜி டாண்டன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானதாக மருத்துவமனை தற்போது அறிவித்துள்ளது. லால்ஜி டாண்டனின் மறைவை அவரது மகனான அசோக் டாண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். அவரது மகன் அஷுதோஷ் டாண்டன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசில் அமைச்சராக உள்ளார்.
முன்னதாக, லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவாக இருந்ததையடுத்து, உத்தரப் பிரதேச ஆளுநரான ஆனந்திபென் பட்டேலுக்கு, மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:தங்கக் கடத்தல் விவகாரம்: விசாரணையை தீவிரப்படுத்தும் என்ஐஏ