மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர், காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேர் உள்பட ஐந்து பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனிடையே, மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வி.டி. சர்மா, மாநிலச் செயலாளர் சுஹாஸ் பகத் ஆகியோருடன் அம்மாநில முதலமைச்சர் சவுகான் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ் ஆட்சி செய்தபோது அமைச்சர்களாக இருந்த பிரபுராம் சவுத்ரி, இமர்தி தேவி, மகேந்திர சிங் சிசோடியா உள்பட 10 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜகவைச் சேர்ந்த கோபால் பார்கவா, பூபேந்திர சிங், யசோதாராஜே சிந்தியா ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 முதல் 24 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:'நரேந்திர மோடி மக்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றுகிறார்': சுனில் தியோதர்