தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் அமைச்சரை இகழ்ந்த விவகாரம்; கமல்நாத் மீது சிவராஜ் சிங் சௌகான் தாக்கு! - காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்

போபால்: அமைச்சர் இமார்தி தேவிக்கு எதிரான முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத்தின் கருத்து வரம்பு மீறிய, அரசியல் நாகரீகமற்ற கருத்து என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

கமல்நாத்தை கடுமையாக சாடிய மத்திய பிரதேச முதலமைச்சர்
கமல்நாத்தை கடுமையாக சாடிய மத்திய பிரதேச முதலமைச்சர்

By

Published : Oct 20, 2020, 9:40 PM IST

ஈடிவி பாரத் உடனான ஒரு சிறப்பு உரையாடலில், பேசிய சிவராஜ் சிங் சௌகான் " கமல்நாத்தின் இந்தக் கருத்து அமைச்சருக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமரியாதையாகும்.

அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்தப்பின் அதனை நியாயப்படுத்துவது என்பது வெட்கமற்ற தன்மையைக் காட்டுகிறது.

காங்கிரஸின் வக்கிரமான, வெறுக்கத்தக்க மனநிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஒரு பெண்ணைப் பற்றிய இத்தகைய கருத்து ஒவ்வொரு தாய்மார்களுக்கும் எதிரானது.

பெண் குறித்து வரம்பு மீறி கருத்து தெரிவித்துள்ள கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு துணிவு இருக்கிறதா? ஏழைப் பெண்களுக்கு கண்ணியம் இல்லையா?” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கமல்நாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அமைச்சர் இமார்தி தேவி தெரிவித்திருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதியும், இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details