மத்தியப் பிரதேசத்தின் மாண்டசார் மாவட்டத்தில் மல்ஹர்கர் என்ற பகுதியில் நேற்று( மே 24) வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்து வந்தன. இதனை மத்திய வெட்டுக்கிளி குழு, வேளாண் அறிவியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதல் பயிற்சியாக பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து 60 விழுக்காடு அகற்றினார்கள் என்று மாண்டசார் மாவட்ட நீதிபதி மனோஜ் புஷ்ப் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பல துறைகள் தங்களின் ஆலோசனையை கூறிவருகின்றனர்.
அதன்படி உத்தரப் பிரேதச வேளாண்மைத் துறை இதுகுறித்து கூறுகையில் ராஜஸ்தான், ’மத்தியப் பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அதிக ஒலி எழுப்பும் டிரம்ஸ், தட்டுகளை அடித்தல் மூலம் விவசாயிகள் விரட்டலாம்’ என கூறியுள்ளது.