கார்பைன் எனப்படும் சிறிய ரக துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது பெரிய அளவில் பயன் தரவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டு வருகிறது.
சீனாவுடன் பதற்றமான சூழல் நீடித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போர்க்களத்தில் குறுகிய தூரத்தில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்த இந்த சிறிய ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கு வங்கம் இஷாபூரில் உள்ள ஆர்ட்ணன்ஸ் ஃபேக்டரி போர்டு என்ற அரசு நிறுவனம் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது. இறக்குமதி செய்வதற்கு பதில் துப்பாக்கிகளை மொத்தமாக இங்கிருந்து வாங்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்களை வாங்கும் நோக்கில், இங்கிருந்து தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை முதற்கட்ட சோதனைக்கு முப்படை வீரர்கள் உட்படுத்தியுள்ளனர்.