லக்னோவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததையடுத்து அம்மாவட்ட சுகாதாரத் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அம்மாவட்ட மிட்லேண்ட் மருத்துவமனையில் முன்னதாக பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவர், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த அந்நபர், அலுவல் தொடர்பாக அடிக்கடி தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுவந்துள்ளார். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல்நிலை சீரற்றுபோய் தற்போது உயிரிழந்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் குறித்து தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் நிலையில், மேலும் இரண்டு நபர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை