உலகம் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நாம் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையினைச் சமாளிக்க முயன்று கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கும் தருவாயில், தெற்கு ஆசியாவின் ஒரு பகுதியானது பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறது. கட்டுப்பாட்டுக் கோட்டின் எல்லையில் இந்திய, பாகிஸ்தானிய ராணுவங்களுக்கு இடையே குருதிப் போரானது குமுறிக் கொண்டிருக்கிறது.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் மாதம் மட்டும் 411 போர் நிறுத்த மீறல்கள் நடந்துள்ளன. இது, கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நடந்தேறிய மீறுதல்களைவிட, 50 விழுக்காடு அதிகமாகவும் 2018 ஆம் ஆண்டினைக் காட்டிலும் இரு மடங்குமாகும்.
ஏப்ரல் 5 அன்று, கெரான் பிரிவில் ஊடுருவ முயன்ற ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஐந்து சிறப்புப் படையினர் உயிர்த் தியாகம் செய்து உள்ளனர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல், வெடிகுண்டுகள் மீதான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள காணொலியினை வெளியிட்டது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதேபகுதியில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இந்தியக் குடிமக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் ஒரு எட்டு வயது குழந்தையும் இருந்தது.
இத்தருணத்தில், வெளிப்படையாகவே சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நினைவுச் சின்ன விகிதமான நெருக்கடியினைக் கையாளும் தருணத்தில் எல்லைப் பகுதியெங்கும் ஒரு சமாதானக் காலத்தைக் கொண்டிருக்க முடியாதா? நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய பொதுவான எதிரியை எதிர்த்துப் போராடுவதில் நம்முடைய ஆற்றலைத் திசை திருப்ப வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை "ஆம்" என்பதே ஆகும்.
ஆனால், துரதிருஷ்டவசமான உண்மை என்னவென்றால், தார்மீகப் பரிமாணங்கள் எப்போதுமே தேசிய முடிவுகளைக் கட்டளையிடுவது இல்லை என்பதுதான். இரு ராணுவங்களின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர்களின் சொற்களின் அடிப்படையில்தான் எல்லைக் கோட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடானது நடத்தப்படுகிறது.
தரப்படும் நிலையான அறிக்கைகள் கூறுவதென்னவென்றால், "கடுமையானப் பதிலடி" கொடுக்கப்பட்ட மறுபுறத்தில், "தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு" நடத்தப்பட்டது என்பதேயாகும். ஆனால், உண்மையானது சற்று மாறாகவே இருக்கிறது.
போர் நிறுத்த மீறுதல்கள் என்பது வெறுமனே பதிலுக்குப் பதிலடி கொடுப்பதென்பது அல்ல. ஆனால், அது எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவ வேண்டியதொரு பெரியப் பாதுகாப்பு நிலைமையின் வெளிப்பாடாகும்.
கடந்த 2012 வரை இருதரப்பினருமே இந்தியா பாகிஸ்தான் இடையேயான 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பொதுவாகவே மதித்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் பகுதியில் இருந்த இந்திய ரோந்து வாகனத்தின் மீது ஒரு தாக்குதல் ஆரம்பித்தது. அதில் லான்ஸ் நாய்க் ஹேம்ராஜ் என்ற ஒரு சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டினையொட்டி கன்னி வெடிகளும், உள்நாட்டு வெடிகளும் வெடிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில், பூஞ்ச் பிரிவில், பாகிஸ்தான் எல்லைப் படை நடவடிக்கைக் குழு நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஒட்டுமொத்தப் பாதுகாப்பு நிலைமையானது சீர்குலைந்ததால், கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் பதட்டங்கள் வெடித்தன. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடானது படிப்படியாக அதிகரித்தபடியால், இருதரப்பு ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர்களும், 14 ஆண்டுகளில் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்க உடன்பட்டனர்.
இச்சந்திப்பின் நிமித்தம் சூழ்நிலையைத் தணிக்க உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், தரைமட்ட அளவில் சிறிய தாக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், 2014 இல் போர் நிறுத்த மீறுதல்கள் அதிகமாகிவிட்டன.
இரு தரப்பும் 2003 ஒப்பந்தத்தினை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு, அது நிகழ்ந்து எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாக ஒரு கற்பனை செய்துகொண்டாலும், அது நடைமுறை அனுபவமாகாது என்பதற்கு, 2013 ஆம் ஆண்டு நிகழ்வினையே நான் ஒரு உதாரணமாகக் கூறுகின்றேன்.