குறைந்த பட்ஜெட் வீட்டுக்கு அதிரடி சலுகை! - சலுகை
குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

house tax
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அதிரடி சலுகையாக, குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்கும் பெருவாரியான நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.