உத்தரப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மவுதாஹா பகுதியைச் சேர்ந்த சந்தீப்புக்கும், அவருடன் ஒரே வகுப்பில் பயிலும் மாணவிக்கும் இரண்டாண்டுகள் பழக்கம். இருவரும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். இந்தக் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, சந்தீப்புடன் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் சந்தீப்பின் பெற்றோர் முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில் மாணவியிடம் பேசிய அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றினர்.
இதைத்தொடர்ந்து மாணவி, காவல்நிலையத்தில் சந்தீப் குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் சந்தீப், அவரது பெற்றோரை பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில் மாணவி புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.