கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, பசியின்மை, மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வாசனை, சுவை உணர்வுகளை ஒருவர் இழக்கக்கூடுமானால் அவர் கரோனா பரிசோதனை செய்யக்கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்றின் அறிகுறிகள் ஏனெனில் வாசனை, சுவையை உணரமுடியாமல் போவதும்கூட கரோனா அறிகுறிகள்தான் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
கடந்த மே மாதத்திலேயே வாசனை, சுவையை உணரமுடியாமல் இருப்பதும் கரோனா அறிகுறிப் பட்டியலில் உண்டு என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:உலகளவில் 78 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!