தெலங்கானா மாநிலம், மெடாக் மாவட்டத்தின் துப்ரான் பகுதி வழியாக செல்லும் நெஞ்சாலையில் அலாப்பூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து நிசாமாபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று இந்த சுங்கச் சாவடி அருகே வந்துள்ளது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அசுர வேகத்தில் அங்கிருந்து டோல் பூத் ஒன்றில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக, இதில் எந்த உயர்சேதமும் ஏற்படவில்லை.
பின்னர், விபத்துக்குள்ளான லாரியை சம்பவ இடத்திலிருந்து அகற்ற பலமணி நேரம் ஆனதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்த சம்பவம் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் இடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.