கர்நாடகா மாநிலம் சிவமோகா பகுதியில் சிலிண்டர் கேஸ் ஏற்றிச் சென்ற லாரியும், எதிரில் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விவரமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி - கர்நாடகா
பெங்களூரு: சிவமோகா பகுதியில் இரண்டு லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்து
இவ்விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால், இக்கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார்வாட் பகுதியில் நேற்று கட்டட விபத்து ஏற்பட்டு 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.