தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிகரெட் புகைக்கும் சிவன்... இமயமலையில் ஆன்மிக அதிசயம்..! - சிகரெட் புகைக்கும் சிவன்.! இமயமலையில் ஆன்மிக அதிசயம்..!

சோலன்: சிகரெட் புகைக்கும் சிவலிங்கத்தை கொண்டுள்ள இமயமலையிலுள்ள ஆன்மிக அதிசய தலமான லுத்ரு மஹாதேவ் குறித்து காணலாம்.

Lutru Mahadev Temple  Himachal Pradesh  Lord Shiva  cigarettes  Solan  சிகரெட் புகைக்கும் சிவன்.! இமயமலையில் ஆன்மிக அதிசயம்..!  லுத்ரு மஹாதேவ் கோயில், இமாச்சலப் பிரதேசம், சோலன் ஆன்மிக தலம்
Lord Shiva smokes cigarette in this mysterious Himachal temple!

By

Published : Feb 18, 2020, 11:32 PM IST

இமயமலை அமைந்திருக்கும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்திலிருந்து, நான்கு கிலோ மீட்டர் தொலைவில் ஆர்கி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் லுத்ரு மகாதேவ் என்ற சிவபெருமான் கோயில் உள்ளது. இக்கோயில், கடந்த 1621ஆம் ஆண்டு பாகல் என்ற மன்னனால் கட்டப்பட்டதாகும்.

இம்மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், சமுத்திரத்தின் (கடல்) கோபத்திலிருந்து பூமியை காக்க இப்பகுதியில் கோயில் கட்டுமாறு பணித்தார். இதையடுத்து, மன்னர் பாகல், இப்பகுதியில் சிவபெருமானுக்கு கோயில் கட்டினார்.

லுத்ரு மகாதேவ் கோயிலில் குகை ஒன்று உள்ளது. இக்குகையில் அகத்திய மாமுனி தவம் புரிந்தார் என்றும், இது பரசுராமனின் கர்ம பூமி (பணி செய்த இடம்) என்றும் நம்பப்படுகிறது. இக்கோயிலிலுள்ள சிவலிங்கம் மற்ற கோயில்களை போல் காணப்படுவதில்லை. குழிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்தக் குழிகளில் சிகரெட்டுகள் ஒட்டிவைக்கப்படுகின்றன. இந்தச் சிகரெட்டுகளை பற்ற வைத்தால், ஒளிருகிறது. இதனை பார்த்தால் சிவன், புகைப்பது போல் காணப்படும்.

சிகரெட் புகைக்கும் சிவன்.! இமயமலையில் ஆன்மிக அதிசயம்..!

சிவபெருமானின் திருக்கல்யாண காட்சி கொடுத்த தலமாகவும் இது உள்ளது. இங்கு நடக்கும் மஹா சிவராத்திரி பூஜைகள் சிறப்பு பெற்றது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க:தஞ்சை கோயில் குடமுழுக்கு

ABOUT THE AUTHOR

...view details