இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது பச்சை மற்றும் மஞ்சள் பகுதிகளிலுள்ள மதுக்கடைகளைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.
அதன்படி நொய்டாவின் கவுதம் புத்தா நகரில் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே மதுக்கடையில் குவியத் தொடங்கினர். மாவட்ட நீதிபதி எல்.ஒய். சுஹாஸின் உத்தரவுப்படி நொய்டா பகுதியில் காலை 10 மணி முதல் 7 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நொய்டா பகுதியில் 391 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 97 மதுபான கடைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்பதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.