தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கணவர்களுக்காக ஒயின் வாங்க வந்தோம்!' - டெல்லி பெண்கள்

டெல்லி: தங்களது கணவர்களுக்காக மதுக்கடைக்கு வந்ததாக பெண்கள் கூறியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

long-queues-of-women-outside-liquor-shops-in-delhi
long-queues-of-women-outside-liquor-shops-in-delhi

By

Published : May 7, 2020, 12:05 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மே 3ஆம் தேதிக்குp பின் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அரசு வகுத்த விதிமுறைகளை மதுபானக் கடைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே மதுப்பிரியர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

வரிசையில் நின்ற பெண்கள்

இதனிடையே டெல்லி அரசு மதுபானங்களின் கட்டணங்களை 70 விழுக்காடு உயர்த்தியது. ஆனாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் பல பெண்கள் நின்று மதுபானம் வாங்கிய புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. இதுகுறித்து வரிசையில் நின்ற பெண் ஒருவரிடம் பேசுகையில், ''எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அதனால் அவருக்காக மதுபானம் வாங்க நான் வந்தேன்'' என்றார்.

இதையும் படிங்க:தேனீக்களாய் மாறிய மதுப்பிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details