தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீடிப்பு! - Nirav Modi

லண்டன்: வங்கி மோசடி வழக்கில் கைதாகி உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜூன் 27ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீடிப்பு

By

Published : May 30, 2019, 4:31 PM IST

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடன் பெற்றுவிட்டு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை விட்டு தப்பியோடினர்.

கடன் மோசடி தொடர்பாக நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத் துறை, தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

இதற்கிடையே, "தி டெலிகிராப்" எனும் சர்வதேச நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக திரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அவருடன் பல்வேறு வினாக்களை எழுப்பினர். அதற்கு அவர் "மன்னிக்கவும் என்னால் பதில் செல்ல முடியாது " என்று தொடர்ந்து கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து மத்திய அரசு நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டது.

அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஏப்ரல் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜூன் 27 தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details