தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவப்பு நிறமாக மாறிய ஏரி - காரணம் என்ன? - மகாராஷ்டிராவிலுள்ள லோனார் ஏரி

மும்பை: மகாராஷ்டிராவிலுள்ள லோனார் ஏரி திடீரென சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கிறது.

lonar-lake-water-in-maharashtra-turns-red
lonar-lake-water-in-maharashtra-turns-red

By

Published : Jun 11, 2020, 12:26 PM IST

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ளது லோனார் ஏரி. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த ஏரியின் நிறம் சிவப்பாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இதையடுத்து ஏரியில் நிகழ்ந்துள்ள நிற மாற்றத்திற்கு என்ன காரணம் என வனத்துறையினர் பரிசோதனை செய்ய விரைந்தனர்.

ஏரியின் நிற மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏரியிலுள்ள நீர் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆய்விற்குப் பின்னர் ஏரியின் நிற மாற்றத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், ஏரியின் நிற மாற்றம் குறித்து பலர் வதந்திகளைப் பரப்பிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details