தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவையில் இன்று நிறைவேறுகிறது 'முத்தலாக் தடை'! - முத்தலாக்

புதுடெல்லி: 'முத்தலாக் தடை’ சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் இன்று மக்களவையில் நடைபெறயுள்ளது.

மக்களவையில் இன்று நிறைவேறுகிறது-'முத்தலாக்'

By

Published : Jul 25, 2019, 11:54 AM IST

இஸ்லாமிய ஆண் 'தலாக்' எனும் சொல்லை மூன்று முறை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்பது முத்தலாக் சட்டம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த ஆட்சியின்போது பாஜக அரசு முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது.

ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோதும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக, இன்று மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற முன்வந்துள்ளது.

மேலும் பாஜக எம்.பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவையில் கலந்துகொள்ளும்படி கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details