கடந்த பிப்ரவரி மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவரும், உளவுத் துறை அலுவலர் ஒருவரும் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 'சட்டம் ஒழுங்கு முறையாகப் பாதுகாக்கப்படவில்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்த எதிர்க்கட்சிகள், 'அதற்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்' என வலியுறுத்தினர்.