தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து! - கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழத்து தெரிவித்துள்ளார்.

Om Birla wishes Kanimozhi for her birthday
Om Birla wishes Kanimozhi for her birthday

By

Published : Jan 5, 2020, 9:05 PM IST

திமுக மகளிரணித் தலைவரான கனிமொழி, இன்று தனது 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 2007ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை தோற்கடித்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கனிமொழிக்கு காலை முதலே பல்வேறு தலைவர்களும் வாழத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன்" என்று கனிமொழிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனிமொழி இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழத்து பெற்றார்.

இதையும் படிங்க: குழந்தைகள் மரணம்: பதில் அளிக்க மறுத்த பாஜக முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details