தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அரசியல் தலைவர்கள் சுய விளம்பரங்களை நிறுத்த வேண்டும்’ - மக்களவையில் காற்று மாசு பேச்சு

டெல்லி: அரசியல் தலைவர்கள் தங்களின் சுய விளம்பரத்தை நிறுத்திவிட்டு அதற்கு செலவு செய்யும் பணத்தை காற்று மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம்

By

Published : Nov 22, 2019, 12:30 PM IST

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு விளம்பரத்திற்கு செலவிடும் பணத்தை காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்" என்று விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர், "காற்று மாசை கட்டுப்படுத்த தேசிய தூய்மை காற்று (National Clean Air Programme) என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ஆனால் அதில் சட்ட நெறிமுறைகளை கொண்டுவந்து சாலைகளில் காற்று மாசை ஏற்படுத்துவோருக்கு தண்டனை அளிக்கவேண்டும். அப்போதுதான் அந்த திட்டம் உண்மையாக உயிர் பெறும்.

டெல்லியில் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும் காற்று மாசினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இழக்கும் அபாயம் உள்ளது. காற்று மாசில் இருக்கக் கூடிய நச்சுத்தன்மை டெல்லியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுரையீரல் மிக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஹரியானா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த பிறகு வயலில் தங்கக் கூடிய கழிவுகளை எரிப்பதற்கு நவீன இயந்திரங்களை கொண்டு வரவேண்டும். அதனால் வெட்டவெளியில் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்தப்படுத்தக்கூடும்" என்றார்.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா பேசியதாவது, "அரசியல் தலைவர்கள் தங்களைக் குறித்து விளம்பரம் செய்வதற்கு அவர்கள் ஒன்றும் விளம்பர சவுக்காரம் (soap) இல்லை. ஆகையால் அவர்கள் தங்களின் சுய விளம்பரத்தை நிறுத்திக்கொண்டு அதற்கு செலவிடும் பணத்தை காற்று மாசைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க: டெல்லி காற்று மாசுபாடு: நாடாளுமன்றத்தில் வைகோ உரை!

ABOUT THE AUTHOR

...view details