தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா? - வெட்டுக்கிளி தாக்குதல்

குஜராத் மாநிலத்தில், பல லட்சக்கணக்கில் பூச்சிகள் விளை நிலங்களில் படர்ந்து கிடந்த காட்சியால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

locust attack on paddy fields, வெட்டுக்கிளி, வெட்டுக்கிளி தாக்குதல்
வெட்டுக்கிளியால் அழிக்கப்பட்ட விளை நிலங்கள்

By

Published : Dec 20, 2019, 11:11 AM IST

குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விளைநிலங்களில் பரவி பயிர்களை அழித்துள்ளது. விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம், மேற்குறிப்பிட்ட செய்தி நம்பும்படியாக இல்லாவிட்டாலும், நம்பிதான் ஆக வேண்டும். சில நாட்களுக்கு முன் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த 'காப்பான்' படமும், இது தொடர்பான சில கதைகளை உள்ளடக்கி இருந்தது.

பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க விளைநிலங்கள் மீது கண் வைப்பதும், நிலங்களைத் தர விவசாயிகள் மறுப்பதும், அப்போது இந்த பூச்சித் தாக்குதலை செயற்கையாக அந்நிறுவனம் உருவாக்கி விவசாயத்தை அழிப்பதுமாக இத்திரைப்படத்தில் கதை நகர்கிறது.

'காப்பான்' திரைப்படத்தில் சூர்யா

இப்படம் சொல்லும் கதைபோல், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இப்படியான பூச்சித் தாக்குதல் நிகழ்ந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

இது குறித்து அம்மாநில வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டுக்கிளியால் அழிக்கப்பட்ட விளை நிலங்கள்

இதையும் படிங்க:
14 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 5 லட்சத்த கோட்டைவிட்ட டோமினோஸ்!

ABOUT THE AUTHOR

...view details