ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - undefined
18:51 May 30
ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு, "நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பட்டுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தியபின் திறக்கப்படும்.
ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுதலங்கள், உணவகங்கள், மால்கள் திறக்கப்படும். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் சூழலுக்கேற்ப செயல்பட அனுமதி அளிக்கப்படும்" என அறிவித்துள்ளது.