கரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் முழுவதும் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, பெங்களூருவில் சஞ்சயநகர பகுதியில் 144 தடை மீறி இளைஞர்கள் சிலர் சாலையில் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது, பணியிலிருந்த காவலர் ஒருவர், இளைஞர்களைக் கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென்று இளைஞர்கள் காவலரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.