தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் தொழிலாளர்களை புதிய தொழிலுக்கு மாற்றிய லாக்டவுன்! - பாலியல் தொழிலாளர்

பெங்களூரு: கர்நாடகாவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பலர், ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக பொருள்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

lockdown
lockdown

By

Published : Jul 2, 2020, 7:26 AM IST

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பலர் உள்ளனர்‌. இவர்களை அப்பகுதியில் சிவப்பு அழகிகள் என்று தான் அழைக்கிறார்கள்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அவர்களின் வாழ்வாதரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

வாடிக்கையாளர்கள் யாரும் வராத காரணத்தினால் வருமானமின்றி தவித்துவந்தனர். இந்தப் பெண்கள் சிலர் ஒன்றிணைந்து, வீட்டில் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளர்.

இவர்கள் தயாரிக்கும் பொருள்களை அரசாங்கம் நேரடியாக வாங்கி விற்பனை செய்கிறது. ஊரடங்கால் பலர் வேலையின்றி, வருமானமின்றி தவித்து வரும் நிலையில், பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களின் மனமாற்றம் பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

ABOUT THE AUTHOR

...view details