கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - ஊரடங்கு நீட்டிக்கப்படுமா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்புக்குப் பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதனை நீட்டிக்க நிறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை ஒரே நடவடிக்கையில் தளர்த்த முடியாது என, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சுகாதாரப் பணியாளர்கள்களே உண்மையான தேசபக்தர்கள்' - ராகுல் காந்தி!