புதுச்சேரியில் கடத்த சில வாரங்களாகப் கரோன தொற்றால் பாதிக்கபட்டர்வகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த மே மாதம் இறுதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. தற்போது புதுச்சேரியில் கரோனா தொற்று தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று(ஆகஸ்ட்24) மேலும் 345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மேலும் 5 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா நோயைக் கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வலியுறுத்தியுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தவேண்டும். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், மேலும் 40 சதவீதம் பேர் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க முடியும்.