நாடு தழுவிய முடக்கம் வருகிற 17ஆம் தேதியுடன் நிறைவுறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் இன்று (மே 11) காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ் (தீநுண்மி) ஏற்படுத்திய சுகாதார நெருக்கடிக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஐந்தாவது முறையாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையின்போது, நாடு தழுவிய முடக்கத்துக்கு பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடக்கும் எனத் தெரியவருகிறது.
மேலும், “கூட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதிலும், நாடு தழுவிய முடக்கம் மே 17ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் விவாதிக்கப்படும்” என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும்விதமாக நாடு தழுவிய முடக்கம் மார்ச் 25ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டது. இது ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்