உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 29 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டும், 874 உயிரிழந்தும் உள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பொருளாதார நிலைமைகளை சீர்ப்படுத்த தளர்வளிக்கப்பட்ட சூழலில் தொற்றுநோய் பரவல் வேகமெடுத்தால் டெல்லி அரசு செய்வதறியாது நிற்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை தடுக்க தேசிய தலைநகரில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே ஊரடங்கு தளர்வு நடைமுறையில் இருப்பதால், டெல்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது. மேலும், சிவப்பு குறியீட்டுப் பகுதிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.