தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2020, 12:08 PM IST

Updated : Nov 24, 2020, 3:46 PM IST

ETV Bharat / bharat

புதுசேரியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

Curfew implemented in puducherry from today
புதுசேரியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

12:03 November 24

புதுச்சேரி: நிவர் புயலின் காரணமாக முன்னெச்சரிக்கை கருதி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல், முன்னெச்சரிக்கை கருதி புதுச்சேரியில் 7ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயலானது புதுச்சேரி அருகே கரையைக் கடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

எனவே, இன்று(நவ. 24) இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை (நவ. 26) காலை 6 மணி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பூர்வ கார்க் அறிவித்துள்ளார். 

பாலகம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து இதர கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும், பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. இந்த நிவர் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டியில் நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் தீவிரம்

Last Updated : Nov 24, 2020, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details