உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் 390 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா அரசு கடந்த 25ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கை அறிவித்தது. இதனையடுத்து, பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும், கர்நாடகா முழுவதுமுள்ள மதுபானக்கடைகள், விடுதிகள், பார்கள், அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் பல மதுபான பிரியர்கள் மதுபானம் வாங்கமுடியாமல் தவித்துவந்துள்ளனர். ஒரு சிலர் கள்ளச்சாராயத்தை நோக்கி ஓடவும் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், மதுவுக்கு அடிமையாக இருந்துவந்த கர்நாடகா மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை அடுத்துள்ள காம்பியாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜம்பக்கா கட்டிமணி (47), அவரது தம்பி பசவராஜா வெங்கப்ப குருவினகோப்பா (45) ஆகிய இருவரும் கடந்த 25ஆம் தேதியிலிருந்து மதுபானம்கிடைக்காமல்அவதிப்பட்டுவந்துள்ளனர்.