கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை மே 31ஆம் தேதிவரை நீட்டித்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
பல்வேறு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின்போது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆகியோர் அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகளைத் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.