தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பல் மருத்துவமனைகள் இயங்கலாம்’ - மத்திய சுகாதாரத் துறை - மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கரோனா தொற்று பரவுதல் அடங்காத நிலையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி பல் மருத்துவமனைகள் இயங்கலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘பல் மருத்துவமனைகள் இயங்கலாம்’-மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
‘பல் மருத்துவமனைகள் இயங்கலாம்’-மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

By

Published : May 20, 2020, 11:33 AM IST

கரோனா தொற்று பரவுதலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு கூறும் விதிமுறைகளின்படி ஒரு சில பல் மருத்துவமனைகளைத் திறக்கலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிவப்பு மண்டலங்களில் உள்ள ஒரு சில பல் மருத்துவமனைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நோயாளிகள் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் உள்ள அனைத்து பல் மருத்துவமனைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வலி குறித்த ஆலோசனைகள் மட்டுமே வழங்க வேண்டும், சிகிச்சையளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சையென்றால் மட்டுமே நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து பல் மருத்துவமனைகள் இயங்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பல் மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details