தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாக் அப் மரணம்... தலைமறைவாக இருந்த சிறை கண்காணிப்பாளர் சரண்! - accused surrendered

புதுச்சேரி: விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிறைக் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

pondicherry court

By

Published : Sep 21, 2019, 12:05 AM IST

புதுச்சேரி பாகூர் காவல்நிலையத்தில் கடந்தாண்டு கடலூரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்ற இளைஞர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஜெயமூர்த்தி திடீரென மரணமடைந்தார் இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர் இது தொடர்பாக பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர், சிறை மருத்துவர் உட்பட நால்வர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் தலைமறைவாகினர். கடந்த ஒரு ஆண்டாகத் தலைமறைவாக இருந்த சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் நேற்று மதியம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண்டைத்தார். இதனையடுத்து சரணடைந்த பாஸ்கரை, நீதிபதி சுபா அன்புமணி உத்தரவின் பேரில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சிறைத்துறை சூப்பிரண்ட் பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details