தென்மேற்கு பருவ மழையால் பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பிகார் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ளத்திலிருந்து தப்பிக்க தடுப்பணை கட்டும் கிராம மக்கள்! - தடுப்பணை
பட்னா: பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து தங்களது கிராமத்தை பாதுகாக்க கர்ஜாப்பட்டி பொதுமக்கள் தடுப்பணை கட்டியுள்ளனர்.
பொதுமக்கள்
இதனையடுத்து, பிகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கர்ஜாப்பட்டி கிராம மக்கள், தங்களது கிராமத்திற்குள் வெள்ளம் வராத வண்ணம் மணல் மூட்டைகள், மூங்கில் உள்ளிட்ட பொருட்களை வைத்து தடுத்து வருகின்றனர். இதற்கு கிராம மக்கள் அனைவரும் தங்களது பங்கிற்காக பொருட்களை வழங்கினர்.
பிகாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.