ஒடிசா மாநில பலசோர் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூர் கிராமத்தில் அரிய வகையிலான மஞ்சள் நிற ஆமை ஒன்றை அப்பகுதி மக்கள் நேற்று (ஜூலை19) கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த மக்கள் வனத்துறையினரை அழைத்து அந்த ஆமையை ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட ஆமையை பற்றி பேசிய வனவிலங்கு வார்டன் பானூமித்ரா ஆச்சார்யா, "இது ஒரு தனித்துவமான உயிரினம், ஆமையின் முழு ஓடு மற்றும் உடல் மஞ்சள் நிறமாக உள்ளது. இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்றார்.
கடந்த மாதம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கீழ் உள்ள டியுலி அணையில் மீன் பிடிப்பவர்களால் அரிய வகை ட்ரையோனிச்சிடே ஆமை பிடிபட்டது. பின்னர் இதை டியூலி அணையில் வனத்துறையினர் விடுவித்தனர். ட்ரையோனிச்சிடே ஆமைகள் மென்மையான ஆமைகள், அவை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன.