தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை அருகே தடம்புரண்ட உள்ளூர் ரயில் - அட்கான் ரயில்வே நிலையம்

மும்பை : மகாராஷ்டிர மாநிலம், அட்கான் ரயில் நிலையம் அருகே உள்ளூர் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

Local train
Local train

By

Published : Sep 19, 2020, 12:59 PM IST

தானே மாவட்டத்தின் மத்திய ரயில்வே வழித்தடத்தில் அட்கான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது மும்பையிலிருந்து 95 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இந்நிலையில், உள்ளூர் ரயில் ஒன்று கல்யானிலிருந்து கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, காலை 7.28 மணியளவில் அட்கான் ரயில்வே நிலையம் அருகே வந்தபோது, ரயிலின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெட்டி தடம்புரண்டது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. தடம்புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விபத்து ஏற்படுகையில் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகளே பயணித்தனர்.

தற்போது, தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய -அவசர சேவைப் பிரிவு பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே மும்பை உள்ளூர் ரயிலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details