தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடன் தவணை வட்டித் தள்ளுபடி குறித்து ஆராய நிபுணர் குழு - மத்திய நிதியமைச்சகம் - வங்கிக் கடன் வட்டி உச்ச நீதிமன்ற வழக்கு

மார்ச் முதல் ஆகஸ்ட் காலத்தில் வங்கிக் கடன் தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய சாத்திய கூறுகளை ஆராய மத்திய நிதியமைச்சகம் நிபுணர் குழு அமைத்துள்ளது.

Loan Moratorium
Loan Moratorium

By

Published : Sep 10, 2020, 10:41 PM IST

கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை பொதுமக்கள் சமாளிக்க ரிசர்வ் வங்கி, வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (மார்ச் முதல் ஆகஸ்ட்வரை) மாத காலம் நீட்டித்து சலுகை வழங்கியது. அதேவேளை தவணைத் தொகையை பின்னர் செலுத்த வேண்டும், அதற்கு விலக்கு இல்லை எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தவணைத் தொகைக்கான வட்டியையும் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆறு மாத தவணைக் காலத்தில் வட்டித்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஆறு மாத தவணை நீட்டிப்பு காலத்தில் வட்டித் தள்ளுபடியை மேற்கொள்ள முடியுமா என்பதை ஆராய நிபுணர் குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் நியமித்துள்ளது. சி.ஏ.ஜி. அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜீவ் மெஹ்ரிஷி தலைமையில் மூன்று நபர் குழுவை நிதியமைச்சகம் நியமித்துள்ளது. ஐ.ஐ.எம். முன்னாள் பேராசிரியர் ரவீந்திர தோலாக்கியா, ஸ்டேட் வங்கி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் - கிரிசில் அமைப்பு தகவல்

ABOUT THE AUTHOR

...view details