பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியை முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை தாங்கியுள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக பிரதான கட்சியாக உள்ள நிலையில், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பிடித்துள்ளது.
இந்தச் சூழலில், ஐக்கிய ஜனதா தளத்துடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் லோக் ஜனசக்திக்கு முரண்பட்ட கருத்துகள் நிலவிவருகிறது. இதையடுத்து அக்கட்சி கூட்டணியிலிருந்து விலகி தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை முன்னிறுத்தி 143 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.