தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல் கூட்டணியிலிருந்து ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி விலகியது ஏன்? போட்டுடைத்த சுஷில் மோடி! - பாஜக கூட்டணியிலிருந்து லோக் ஜனசக்தி கட்சி விலகல்

ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியிலிருந்து விலகியது ஏன் என்ற கேள்விக்கு மாநிலத்தின் துணை முதலமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான சுஷில் குமார் மோடி பதிலளித்துள்ளார்.

Bihar polls 2020 LJP side on Bihar election Sushil Modi on LJP LJP-BJP alliance LJP leaves NDA பிகார் தேர்தல் பாஜக கூட்டணியிலிருந்து லோக் ஜனசக்தி கட்சி விலகல் சுஷில் குமார் மோடி
Bihar polls 2020 LJP side on Bihar election Sushil Modi on LJP LJP-BJP alliance LJP leaves NDA பிகார் தேர்தல் பாஜக கூட்டணியிலிருந்து லோக் ஜனசக்தி கட்சி விலகல் சுஷில் குமார் மோடி

By

Published : Oct 16, 2020, 9:34 PM IST

பாட்னா: பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) தேசிய ஜனநாயக கூட்டணியிருந்து விலகியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து எல்.ஜே.பி. விலகியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்நிலையில், எல்.ஜே.பி. விலகியது ஏன் என்ற கேள்விக்கு பிகார் துணை முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சுஷில் குமார் மோடி பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை (அக்.16) கூறுகையில், “பாஜகவை விட அதிக தொகுதிகளை எல்.ஜே.பி. கட்சியினர் கேட்டனர். அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை. ஆகவே கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

பிகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல்கள் நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதி நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் 10ஆம் தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க:ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details