கர்நாடகாவில் உள்ள சாமராஜா நகரில் கேஸ்துர் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் நேற்று வழக்கம்போல் மதிய உணவு அளிக்கப்பட்டது. அப்போது மாணவர் ஒருவர் தன் உணவில் பல்லி இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவரின் உணவை வாங்கி பார்த்துள்ளனர்.
அரசு வழங்கும் மதிய உணவில் பல்லி! - கர்நாடகா
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியின் மதிய உணவில் பல்லி கிடந்தது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவில் பல்லி
அரசு வழங்கும் மதிய உணவில் பல்லி!
மாணவர் சொன்னபடி உணவில் பல்லி இருந்ததையடுத்து, மாணவர்கள் அனைவரும் உணவு உண்ணுவதை ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். இதுகுறித்து அம்பேத்கர் இளைஞர் அமைப்பை நம் நிறுவன செய்தியாளர் தொடர்பு கொண்டு பேசுகையில், "பள்ளி தலைமை ஆசிரியர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டிருந்தால் மாணவர்கள் நிலைமை மோசமாகியிருக்கும்" என்றார்.