இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டரில், "நாட்டில் இரண்டாவது முறை ஆட்சியமைத்த பாஜக ஓராண்டை கடந்த நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் களப் பிரச்னைகளை தீர்ப்பதிலும், மக்கள் தேவைகளை புரிந்து கொள்வதிலும் அதிக மாறுபாடுகள் இருப்பதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது" என்று பதிவிட்டிருந்தார்.
'பாஜக வெளிப்படையாக செயல்பட வேண்டும்' - மாயாவதி - பாஜக கட்சி
லக்னோ: பாஜக அரசு தன்னுடைய பணிகளில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி
மேலும், "நாட்டில் உள்ள ஏழை மக்கள், வேலையில்லாதவர்கள், விவசாயிகள், குடிபெயர் தொழிலாளர்கள், பெண்கள் உட்பட 130 கோடி மக்கள், முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பெரும் நெருகடியைச் சந்தித்து வருகின்றனர். இதனை பாஜக அரசு வெளிப்படைத் தன்மையோடு கையாண்டு அவர்கள் வகுத்துள்ள திட்டங்களை மறுசீராய்வு செய்ய வேண்டும். கட்சியின் குறைபாடுகளை களைய வேண்டுமே தவிர அதனை மூடிமறைக்கக் கூடாது" எனத் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அந்த பிஞ்சுக் குழந்தை செய்த தவறென்ன?