கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, ஐ.நா.,வின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, வேலைவாய்ப்புகளில் கரோனாவின் தாக்கம் குறித்து கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கைகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுவருகிறது.
அதன்படி, தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உலகளவில் ஊரடங்கால் சுமார் ஐந்தரை கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில், மூன்று கோடிக்கும் அதிகமானோர் பெண்கள்தான். உலகளவில் இத்தொழிலாளர்களின் வருமானத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் நடத்திய ஆய்வின்படி, ஆசியா, பசிபிக் நாடுகளில்தான் அதிகமானோர் வேலையிழக்க வாய்ப்புள்ளது. சுமார் 80 விழுக்காடுக்கும் மேலானோர் வேலையிழக்கலாம். அடுத்தபடியாக அமெரிக்காவில் 74 விழுக்காடுக்கு மேல் வேலையிழப்பு இருக்கும். ஆப்பிரிக்க 72 விழுக்காடும், ஐரோப்பா 45 விழுக்காடு அளவிற்கும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.