தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விஷவாயுவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி - ஆந்திர முதலமைச்சர் - CM Jagan announces compensation

அமராவதி: விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை விஷவாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக ஆந்திர முதலமைச்சர் ஜேகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

ே்
்ே்

By

Published : May 7, 2020, 4:39 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகேவுள்ள கோபாலப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், "வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

இதுதவிர முதன்மை மருத்துவச் செலவுகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், வாயுக் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்

ABOUT THE AUTHOR

...view details