ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை, சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி காவலில் எடுத்தது. இவரின் காவலை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தது.
சிதம்பரம் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! - அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் பிணை மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
பிணை மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.