மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் தலைநகர் மும்பை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிகளுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரெட் அலார்ட் எச்சரிக்கை - ரெட் அலார்ட் எச்சரிக்கை
மும்பை: மும்பை, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் ரெட் அலார்ட் எச்சரிக்கை
கனமழை காரணமாக மும்பையின் சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. புனே மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிம்கான் கெட்கி கிராமத்தில் 40 பேர் மீட்கப்பட்டனர். இந்தாப்பூர் அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில், வெள்ளப்பெருக்கில் வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.